தனுஷ் எனக்கு அந்த மாதிரி தான்!.. ரகசிய உறவு குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன்
Dhanush
Shruti Haasan
By Dhiviyarajan
உலக நாயகன் கமல் ஹாசன் போலவே அவரின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனும் இசையமைபாளர், நடிகர், பாடகர் என பல பன்முகங்களை கொண்டவராக இருக்கிறார்.
ஸ்ருதி ஹாசன் தனுஷ் நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான படம் தான் "3" இப்படத்தின் படப்பிடிப்பின் போது தனுஷும் ஸ்ருதி ஹாசனும் நெருக்கம் காட்டுவதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் பல வருடங்கள் கழித்து இந்த விஷயத்தை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நானும் தனுஷும் நல்ல நண்பர்கள். எனக்கு தொழில் ரீதியாக பல உதவிகளை செய்துள்ளார். என்னை குறித்து பல வதந்திகள் எழுகிறது. ஆனால் நான் அனைவரிடமும் சென்று இந்த வதந்தியை நியாய படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.