கீர்த்தி சுரேஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததா? மூதாதையர் வீட்டுக்கு போனது இதுக்குத்தானா...

Keerthy Suresh Maamanithan Indian Actress
By Edward Nov 29, 2022 12:15 PM GMT
Edward

Edward

Report

கீர்த்தி சுரேஷ்

மலையாள நடிகையாக தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தின் மூலம் பிரபலமானார்.

கீர்த்தி சுரேஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததா? மூதாதையர் வீட்டுக்கு போனது இதுக்குத்தானா... | Rumour About Keerthi Suresh Marriage And Engaged

இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். ஆனால் இவர் நடித்து வெளியான மகாநதி, சாணி காயிதம் உள்ளிட்ட ஒருசில படங்கள் மட்டுமே வெற்றியை கண்டது. மற்ற படங்கள் படுதோல்வியை கொடுத்து ராசியில்லா நடிகை என்ற பெயரை கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்தது.

தமிழில் மாமனிதன், சைரன் உள்ளிட்ட ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது.

கீர்த்தி சுரேஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததா? மூதாதையர் வீட்டுக்கு போனது இதுக்குத்தானா... | Rumour About Keerthi Suresh Marriage And Engaged

நிச்சயதார்த்தம்

இந்நிலையில் பெற்றோர்களால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டு நிச்சயம் முடிந்ததாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் திருநெல்வேலியில் இருக்கும் பாரம்பரிய வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து கீர்த்தி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஏற்கனவே கீர்த்தி சுரேஷுக்கு கேரளாவை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் செய்யப்போவதாகவும் அதற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகி அதற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery