புஸ்ஸி ஆனந்த் இதைத்தான் செய்றான்!! விஜய் கட்சி குறித்து தந்தை எஸ் ஏ சி கூறிய ரகசியம்..

Vijay Gossip Today S. A. Chandrasekhar Thamizhaga Vetri Kazhagam Bussy Anand
By Edward Oct 01, 2025 05:11 AM GMT
Report

TVK தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் கடந்த சனிக்கிழமை அரசியல் பரப்புரை செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் விஜய் மற்றும் அவரின் தொண்டர்கள் மீது பலர் கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். இதுகுறித்து விஜய் இரங்கல் தெரிவித்த நிலையில், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.

புஸ்ஸி ஆனந்த் இதைத்தான் செய்றான்!! விஜய் கட்சி குறித்து தந்தை எஸ் ஏ சி கூறிய ரகசியம்.. | S A Chandrasekhar Talk About Tvk Bussy Anand Vijay

எஸ் ஏ சந்திரசேகர்

அதில், விஜய்யின் அரசியல் குறித்து தனக்கு பயமாக இருப்பதாகவும் புஸ்ஸி ஆனந்தையும் வெளுத்து வாங்கியிருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் ஆன்லைன் குரூப் வைத்துள்ளதில் விஜய்யும் இடம்பெற்றுள்ளார்.

மன்றத்துக்கு புஸ்ஸி ஆனந்த் வந்ததும் அருகில் இருக்கும் பெஞ்சில் படுத்துக்கொண்டு ஒருவரை வைத்து போட்டோ எடுக்கச்சொல்லி அதை ஆன்லைன் குரூப்பில் பதிவிடுவார். இதை 50 பேர் ஷேர் செய்யவும் 100 பேர் லைக் செய்யவும் சொல்லுவார். விஜய்யும் அதை நம்பி, அண்ணன் நமக்காக உழைக்கிறார் என்று நாளையில் இருந்து என் அறையில் இருங்கள் என்று சொல்லிவிடுவார்.

இதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது என்றும் இப்படிப்பட்ட ஆள் கூட இருந்தா, என் மகனோட எதிர்காலம் என்னவாகுமோ என ஒரு தந்தையாக எனக்கு பயமாக இருக்கிறது என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.

எஸ் ஏ சந்திரசேகர் பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...