தளபதி விஜய்யால் அஜித் படத்தை ஒதுக்கி வந்த எஸ் ஏ சந்திரசேகர்? இதுதான் காரணம்..

vijay valimai ajithkumar sachandrasekar sac
By Edward Apr 02, 2022 06:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒரு துருவ நட்சத்திரங்களாக எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி இருந்து வந்தனர். அவர்களின் இடத்தினை தற்போது பிடித்து வருபவர்கள் அஜித்-விஜய். 1992 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யை நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி ஒன்ஸ்மோர், சிக்ரன், ரசிகன், நெஞ்சினிலே போன்ற படங்களை கொண்டு இயக்கி பிரபலப்படுத்தினார் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர்.

இதனை முழுதாக பயன்படுத்து நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து முன்னணி நடிகராகினார் விஜய். மகனை இந்த இடத்திற்கு கொண்டு வர பல கஷ்டங்களை கண்டுள்ளேன் என்று விஜய்யின் தந்தை SAC.

தற்போது யூடியூப் சேனல் மூலம் தன்னுடைய ஆரம்பகாலத்தில் இருந்து தற்போது நடந்த சம்பவங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், விஜய் தவிர மற்ற நடிகர்களின் படங்களையும் பார்ப்பேன். ஆனால் அஜித் திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோவை பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு காரணம் அஜித்-விஜய் ரசிகர்கள் தனித்தனியாக பார்த்து வரும் நிலையில் நான் அப்படி சென்று பார்த்தால் ரசிகர்கள் மத்தியில் சில சலசலப்பு ஏற்பட்ட பிரச்சனையாகிவிடும்.

இதனை தவறாக எடுத்துக்கொண்டு செய்திகள் பல ஆரம்பித்து விடும் என்பதால் தான் நான் அதனை தவிர்த்து வருகிறேன். மற்றபடி அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறேன். அப்போதும் சினிமாவைப்பற்றியே அவர் பேசிகொண்டு இருப்பார் என கூறியுள்ளார்.