2ல் ஒன்றை கடவுள் எடுத்துகிட்டார்! எஸ்.ஏ.சி வெளியிட்ட 3 வயதில் மறைந்த விஜய் தங்கையின் புகைப்படம்..
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனராக பயணித்து தன் மகன் விஜய்யை இந்த இடத்திற்கு கொண்டு வர காரணமாக இருந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகம் செய்து தற்போது தமிழ் சினிமாவில் தளபதியாக திகழ்ந்து வருகிறார் விஜய்.
தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை முதல் சினிமா அனுபவங்கள் வரை யூடியூப் சேனலை ஆரம்பித்து வீடியோ மூலம் கூறி வருகிறார். ஆரம்பத்தில் என் பெயர் விஜய்க்காக பேசப்பட்டது.
தற்போது விஜய்யின் அப்பா என்று கூறும் அளவிற்கு மாறியிருக்கும் போது பெற்ற அப்பாவுக்கு இதைவிட வேறொன்றும் இல்லை என நெகிழ்ந்து பேசியுள்ளார். மேலும் எனக்கு 2 குழந்தைகளை கொடுத்த கடவுள், 3 வயதான என் மகள் வித்யாவை எடுத்துக்கொண்டார்.
விஜய் அவரின் தங்கை மீது அதிக அன்போடும் பாசத்தோடும் இருப்பார். என் மனைவி அதிக கஷ்டத்தினை அனுபவித்தாள். தற்போது விஜய் ரசிகர்களால் எனக்கு பலகோடி குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் உருக்கமாக பேசியுள்ளார். வீடியோவில் விஜய்யின் தங்கை திவ்யாவின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.







