சச்சினை பல மணிநேரம் காக்க வைத்த ஏஆர் ரகுமான்! அவருடைய சிஷ்யனாட்சே அப்படித்தான் இருப்பார்..

sachin arrahman isaipuyal
By Jai Mar 30, 2022 05:15 PM GMT
Report

இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் இசைபுயல் ஏ ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் ஆரம்பித்த இயக்குனர் மணிரத்னம் அறிமுகம் செய்யப்பட்டவர் ரகுமான்.

இதையடுத்து ஒரே வருடத்தில் புதியமுகம், ஜெண்டில்மேன், உழவன், திருடா திருடா படங்களில் பணிபுரிந்து பெரிய ஹிட் கொடுத்தார். தமிழில் ஆரம்பித்த இசை வாழ்க்கை ஆஸ்கர் விருதினை பெறவும் வைத்தது.

அப்படியிருக்கும் இசைப்புயலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இந்தியளவில் கோடிக்கணக்கானோர் இருகிறார்கள். அப்படியும் நட்சத்திரங்களுக்கே நட்சத்திரமாக இருக்கும் ஏஆர் ரகுமானை பார்க்க பலர் ஏங்கி காத்திருப்பார்கள்.

அந்தவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பிளாஸ்டருமான சச்சின் டெண்டுல்கர் ஒருமுறை ஏ ஆர் ரகுமானை சந்தித்த பல மணிநேரம் காக்க வைக்கப்பட்டுள்ளாராம்.

ரகுமான் ஒரு இசை கம்போசிங்கில் ரகுமான் இருக்கும் போது சச்சின் அவரது வீட்டிற்கு சென்று சந்திக்க சென்றுள்ளாராம். காத்திருந்து காத்திருந்து ரெண்டு மணிநேரத்திற்கும் மேல் சென்றதாம்.

ஒரு கட்டத்தில் வீட்டின் ரெக்கார்ட்டிங் தியேட்டருக்கே சென்ற சச்சின் அங்கும் வெளியே வரவில்லாததால் ரெக்காடிங் நடக்கும் போது அவர் வீட்டினை சேர்ந்தவர்கள் உள்ளே சென்று சச்சின் வந்திருக்கிறார் என்று கூறியுள்ளனர். உடனே சச்சினை பார்க்க வந்து சில மணிநேரம் பேசிவிட்டு சென்றுள்ளாராம்.