ஒரே வருடத்தில் அப்பா, அம்மா, அண்ணன் மரணம்.. கடும் சோகத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர்..

Mahesh Babu
By Edward Nov 15, 2022 08:18 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இந்த ஆண்டு அவரது அண்ணனும் நடிகருமான ரமேஷ் பாபு ஜனவரி 8 ஆம் தேதி அவரது 56 வயதில் மரணமடைந்தார்.

அவரை தொடர்ந்து சமீபத்தில் அவரது தாயார் உடல் நலக்குறைவால் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர சில மாதங்களில் அவரது தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா அவர்கள் மருத்துவமனையில் உடல்நிலை சரியிலாததால் அனுமதிகப்பட்டு மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளார்.

79 வயதாகும் தந்தையின் மரணத்தால் கடும் சோகம் மகேஷ் பாபுவுக்கு வந்துள்ளது. ஒரே வருடத்தில் தாய், தந்தை, அண்ணன் மரணத்தால் மகேஷ் பாபுவுக்கு இந்திய திரைத்துறையினரும் பிரபலங்களும் ஆழ்ந்த இறங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery