சாய் பல்லவிக்கு சிவகார்த்திகேயன் பட இயக்குனருக்கும் திருமணமா!! வைரலாகும் புகைப்படம்..
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார் நடிகை சாய் பல்லவி.
அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிஸியாகினார் சாய் பல்லவி.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் பல வெற்றியை பெற்றும் வந்திருக்கிறது. இதுவரை நெருக்கமான காட்சி கிளாமர் காட்சியில் நடிக்காமல் வந்திருக்கும் சாய் பல்லவிக்கு தற்போது 31 வயதாகிறது.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமியை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் அது சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் பூஜை என்றும் அப்படத்தில் நடிகை சாய் பல்லவியும் நடிக்கிறார் என்றும் கமல் தயாரிப்பில் உருவாகி வருகிறது என்றும் கூறி வருகிறார்கள்.
சாய் பல்லவி திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் இணையத்தில் பலர் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
Adei ?♂️?♂️?♂️ pic.twitter.com/pk26NRPeFO
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 20, 2023