எனக்கு வேண்டாம், இதனால் எந்த பயனும் இல்லை? பவர் ஸ்டாரை அசிங்கப்படுத்தினாரா சாய் பல்லவி

Sai Pallavi Pawan Kalyan
By Edward Jun 26, 2022 04:20 AM GMT
Report

தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றார். சாய் பல்லவி என்று கூப்பிட்டதைவிட மலர் டீச்சர் என்று கூறியது தான் அதிகம்.

மலர் டீச்சர் டூ ரவுடி பேபி

அப்படிபட்ட கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் ஈர்த்து வந்த சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தனுஷுடன் மாரி 2 படத்தில் ஜோடி போட்டு குத்தாட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் பட்டித்தொட்டியெங்கும் பரவி வைரலாகி சாதனை படைத்தது.

தற்போது தெலுங்கு ஒரு ரவுண்ட் கட்ட ராணா, நானி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடிபோட்டு படத்தினை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ராணா, சாய் பல்லவி நடிப்பில் உருவான விரத பருவம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

அப்படத்தின் பிரஸ்மீட்டின் போது பவர் ஸ்டார் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக வந்து சாய் பல்லவியை லேடி பவர் ஸ்டார் என்று கூறி புகழ்ந்துள்ளார்.

எந்த பயனும் இல்லை

இதற்கு அடுத்து பேசிய சாய் பல்லவி, இந்த லேடி பவர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம். என்னுடைய பெயருக்கு முன் பின் எந்தவிதமான பட்டமும் வேண்டாம் நான் பயின்று பெற்ற டாக்டர் பட்டம் மட்டுமே போதும் என்னை அப்படி எல்லாம் கூறி அழைக்காதீர்கள் என்றும் அதனால் எந்தவித பயனும் இல்லை என்று குறிப்பிட்டு பேசியுள்ளது வைரலாகி வருகிறது.