அந்த 49 வயது நடிகர் படத்தை தூக்கி எறிந்த சாய் பல்லவி! ஓகே சொல்லி கமிட்டான 32 வயது நடிகை
மலையாள சினிமாவில் பல படங்கள் ஹிட் கொடுத்து மறக்க முடியாத நிலையை ரசிகர்களிடன் உருவாக்கும். அந்தவகையில், மலையாளத்தில் கடந்த ஆண்டு இயக்குநர் சாஷி இயக்கிய படம் தான் அய்யப்பனும் கோஷியும். இப்படம் ஈகோ மோதலா இரு அதிகாரிக்களுக்கு ஏற்படும் யதார்த்தமான கதை தான் அப்படம்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்யவுள்ளனர். தமிழில் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கியும், தெலுங்கில் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி வாங்கியுள்ளார். தமிழில் கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கவுள்ள இப்படத்தின் ரீமேக்கிற்கு நடிகர் நடிகைகள் தேர்வு செய்து வருகிறார்கள்.
தற்போது தெலுங்கு ரீமேக்கில் 49 வயதான நடிகர் பவன் கல்யாண் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்கவுள்ளார். ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்துவந்தது. ஆனால், சாய் பல்லவி வேண்டாம் என தூக்கி ஒதுக்கிவிட்டார்.
தற்போது கேட்ட சம்பளத்தை கொடுக்க நடிகை நித்யா மேனனை ஒப்பந்தமாக்கியுள்ளனர் படக்குழு. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பினை பவன் கல்யாண் துவக்கியுள்ளார்.