கத்திக்குத்து வாங்கிய நடிகர் சைஃப் அலிகான்!! ரூ15000 கோடி சொத்துக்கள் இழக்கும் நிலை..
சைஃப் அலிகான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் புகுந்த திருடர்கள் அவரை பல இடங்களில் கத்தியால் குத்திவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதுகு உள்ளிட்ட பல இடங்களில் கத்தி குத்து வாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்த சைஃப் அலிகானின் 15 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு தற்போது ஒரு பிரச்சனை வந்துள்ளது.
நவாப் குடும்பம்
மத்திய பிரதேச தலைநகரான போபால் நவாப் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவரான மன்சூர் அலிகான் பட்டோடி - நடிகை சர்மிளாவின் மகன் தான் சைஃப் அலிகான். பட்டோடி குடும்பத்துக்கு போபாலின் அரண்மனை, கட்டிடங்கள், நிலங்கள் என 15 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் குடியேறியவர்களின் சொத்துக்கள் அரசாங்கம் கையகப்படுத்தும்.
அந்தவகையில், நவாப் குடும்பத்தினை சார்ந்த சைஃப் அலிகானின் தந்தையுடைய அம்மா சஜிதா, எதிரி நாட்டில் இருந்து இந்தியாவில் குடிப்பெயர்ந்தவர் என்பதால் அவரின் சொத்துக்களை மத்திய அரசு கையகப்படுத்த நினைத்துள்ளது. இதனை எதிர்த்து சைஃப் அலிகான் மத்திய பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு தடை விதித்து மனுவை 2024 டிசம்பர் மாதம் மனுவை தள்ளுபடியும் செய்தது.
15 ஆயிரம் கோடி
அதற்கு காரணம் 2016ல் மத்திய அரசு பிறப்பித்த அரசாணையில் போபாலில் உள்ள நவாப் சொத்துக்கள் மீது வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என அறிவித்தது. அதன்படி நவாப் சொத்துக்களை கைப்பற்ற மத்திய அரசுக்கு விடுத்த தடையை நீக்கியது நீதிமன்றம். அதன்பின் சைஃப் அலிகான் வேண்டும் என்றால் 30 நாட்களில் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.
ஆனால் அந்த 30 நாட்கள் முடிந்தும் சைஃப் அலிகான் மேல்முறையீடு செய்யவில்லை. அதனால் நவாப் சொத்துக்களான 15 ஆயிரம் கோடியும் மத்திய அரசு எடுத்துக்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. சில நாட்களில் அரசு நவாப் சொத்துக்களை எடுத்துக்கொள்ளும் என தெரிகிறது. சமீபத்தில் திருடனால் கத்திக்குத்து வாங்கிய சைஃப் அலிகானுக்கு ராஜ அரண்மனை உட்பட 15 கோடி சொத்துக்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.