கல்யாண போட்டோவை இப்பவும் நான் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்!! வெளிப்டையாக பேசிய சைந்தவி..

G V Prakash Kumar Actors Tamil Actors Saindhavi
By Dhiviyarajan May 25, 2024 06:31 AM GMT
Report

ஜி.வி – சைந்தவி இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். இவர்களின் விவாகரத்து விவகாரம் தான் சமீபகாலமாக ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.

கல்யாண போட்டோவை இப்பவும் நான் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்!! வெளிப்டையாக பேசிய சைந்தவி.. | Saindhavi Speak About Relationship With Gv Prakash

இந்நிலையில் சைந்தவி கொடுத்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவரிடம், கல்யாணத்தில் மறக்க முடியாத நிகழ்வு பற்றி கேள்வி கேட்டனர்.

இதற்கு சைந்தவி, கல்யாணமே மறக்க முடியாத நிகழ்வு தான். அந்தநாளை மறக்க முடியாது. ரொம்ப வருஷம் காதலித்து, அந்த நாளுக்கு காத்து இருந்து, திருமணம் செய்துகொண்டோம்.

இப்பவும் கல்யாண போட்டோவை பார்த்துக்கொண்டு இருப்பேன். அதுக்கு ஜிவி, ஏன் எப்போ பாத்தாலும் அதையே பார்த்துகிட்டு இருக்கா? எவ்ளோ வாட்டி பார்ப்ப? என்று கேட்பார். நான் ரீ லிவிங் மொமெண்ட்ஸ் என பதில் சொல்வேன். எனக்கு அது ரொம்ப பிடிக்கும் என்று சைந்தவி கூறியுள்ளார்.