யாருடா அந்த பாலு!! சாய்ராம் கல்லூரி நிறுவனருக்கு அவமானம்!! ஷாக்கான பிரியங்கா..

Priyanka Deshpande Gossip Today Pradeep Ranganathan Dude
By Edward Oct 19, 2025 05:35 AM GMT
Report

சாய்ராம் கல்லூரி

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக பிரபல கல்லூரியாக செயல்பட்டு வருவது தான் சாய்ராம் கல்லூரி. சென்னையில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் விடுமுறை நாட்களில் பட விழாக்கள் நடத்தப்படும்.

அப்படி பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்த டியூட் படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கினார்.

யாருடா அந்த பாலு!! சாய்ராம் கல்லூரி நிறுவனருக்கு அவமானம்!! ஷாக்கான பிரியங்கா.. | Sairam College Founder Balu At Dude Priyanka

யாருடா அந்த பாலு

அப்போது கல்லூரி மாணவர்களிடம், இந்த கல்லூரியின் டியூட் யார் என்று கேட்க, அங்கே இருந்த மாணவர்களோ, பாலு என்று கத்தியிருக்கிறார்கள்.

உடனே எதையும் யோசிக்காத பிரியங்கா, டேய் பாலு, டேய் பாலு, யாருடா எங்கே டா இருக்க பாலு என்று என்று கத்தியிருக்கிறார்.

ஆனால் அதன்பின் தான் அந்த பாலு சாய்ராம் கல்லூரியின் நிறுவனம் பாலு சார் என்று தெரிந்துள்ளது. உடனே பிரியங்கா வாயடைத்து பம்மியபடி ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் இனிமேல் கல்லூரியில் சினிமா நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்ற கண்டனங்களும் எழுந்து வருகிறது.

மேலும் ப்ளூ சட்டை மாறன், கல்லூரிகளில் சினிமா ப்ரமோஷன்களை தொடர்ந்து அனுமதித்து வந்தால்... அதன் முதலாளியும் இப்படி அவமானப்பட நேரும் என்று கூறி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.