நாட்டாமை பட கிளாமர் டீச்சராக மாறிய சாக்ஷி அகர்வால்!! சேலையில் இப்படியொரு போஸ்
தமிழில் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடித்து அட்லியின் முதல் படமாக அமைந்த படம் ராஜா ராணி. அப்படத்தில் மேக்கப் போடாத பெண்ணாக அட்கிரிடிட் ரோலில் நடித்திருந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
மாடலிங் துறையில் இருந்து மாடலாக இருந்து கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமாகினார். அதன்பின் ககக போ, காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, டெட்டி, சின்ரெல்லா, அரண்மனை 3 போன்ற படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் 49 நாட்கள் இருந்து பின் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார். கவினுடன் நெருக்கமாக இருந்து சில சர்ச்சை விசயங்களிலும் சிக்கிய சாக்ஷி, பிக்பாஸ்க்கு பிறகு படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை மிரளவைத்தார்.
இதுவரை பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் சாக்ஷி ரசிகர்களை வாய்ப்பிளக்கும் ஜிம் ஒர்க்கவுட், போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நாட்டாமை பட டீச்சர் லுக்கில் சேலையணிந்து ரசிகர்களை மிரளவைத்துள்ளார்.