நல்லா பண்றமா நீ.. பப்ளிசிட்டிகாக இப்படியா? சாக்ஷி அகர்வாலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
சாக்ஷி அகர்வாலை தெரியத்தவர்கள் இருக்க முடியாது. படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட அவர் சமூக வலைத்தளங்களில் எல்லைமீறி கவர்ச்சி போட்டோக்கள் போட்டு பிரபலம் ஆனது தான் அதிகம். பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் கவின் தன்னுடன் நெருக்கமாக இருந்து ஏமாற்றிவிட்டார் என புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போட்டோ/வீடியோ போடுவது தான் முழு நேர வேலையே. அதை வைத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அவர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் பெய்த பெருமழையில் அவர் மொட்டைமாடிக்கு சென்று ஒர்கவுட் செய்து இருக்கிறார். மழையில் இப்படி செய்தால் நல்லது என போஸ்ட் போட்டிருக்கும் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
பப்ளிசிட்டிக்காக இப்படி எல்லாம் பண்ணுவியா என கலாய்த்து வருகின்றனர்.