மேடையில் கண்ணீர்விட்டு அழுத சல்மான் கான்! கட்டியணைத்த பிக்பாஸ் நடிகை..
biggboss15
salmankhan
Sidharth Shukla
Shehnaaz Kaur Gill
By Edward
பாலிவுட் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் சல்மான் கான். இந்த ஆண்டு 15வது சீசனையும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியின் இறுதி விழா சமீபத்தில் நடந்துள்ளது.
அப்போது சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் நடிகை Shehnaaz Kaur Gill. மறைந்த நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான சித்தார்த் நினைத்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். பின் சல்மான் கானை பார்த்த போது கண்ணீர் விட்டு எமோஷனலானார்.
அதற்கு சல்மான் கானும் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதற்கு காரணம் பிக்பாஸ் போட்டியாளராக இருந்து பின் மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் சித்தார்த்தின் காதலியாக இருந்தவர் Shehnaaz.
அவருக்கு ஆறுதல் கூறி கட்டியணைத்து சோகத்தை வெளிக்காட்டியுள்ளார் சல்மான் கான். இந்த காட்சி இணையத்தில் ரசிகர்களிடையே நெகிழவைத்து வருகிறது.