12 வருஷத்தில் சமந்தா சிக்கிய பிரச்சனைகள்! இப்போதான் விடிவு காலம் வந்திச்சு..

samantha tamilactress
By Edward Feb 26, 2022 09:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் விண்ணத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சிறுகதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சமந்தா. பின் அதன் தெலுங்கு ரீமேக் படத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடி போட்டு கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தில் எடுத்த வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் ஆர்டரில் வந்தார்.

கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்தை பிடித்தது முதல், இடையில் சில காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார் சமந்தா. 2013ல் நடிகர் சித்தார்த்துடன் Jabardasth, தீயாய் வேலை செய்யனும் குமாரு போன்ற படங்களில் நடித்த சமந்தா அவருடன் காதலில் இருந்து வந்தார். பல இடங்களில் இருவரும் ரகசியமாக ஊர்சுற்றியில் வெளிப்படையாக காதலை வெளிப்படுத்தியும் வந்தனர். சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

தங்க மகன் படத்தின் போது நடிகர் தனுஷுடனும் நெருக்கமாக இருந்து பார்ட்டியில் கலந்து கொண்டது கூட கிசுகிசுக்களை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் இருந்தே ஜோடியாக நடித்த நடிகர் நாக சைதன்யா படங்களில் நடிக்க ஆரம்பித்து அவரையும் காதலித்து வந்தார். பின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் 2017ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க ஆரம்பித்த சமந்தா சூப்பர் டீலக்ஸ் படத்தில் சக நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த படத்தில் ஆரம்பித்த பிரச்சனை அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்திக்க காரணமாக அமைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம்தேதி கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதாக கூறி சமந்தா - நாக சைதன்யா இருவரும் விவாகரத்து அறிவிப்பை அறிவித்து ஷாக் கொடுத்தனர். விவாகரத்துக்கு என்ன காரணம் என்று பலவிதத்தில் பல செய்திகளை இணையத்தில் வைரலாக்கினார்கள். இருவரும் தனித்தனியாக பிரிந்து தங்களில் வேலைகளில் கவனம் செலுத்தினர்.

அதிலிருந்து மீண்டு வந்த சமந்தா தோழிகளுடன் ஆன்மீக சுற்றுலா என பல இடங்களுக்கு சென்றும் போட்டோஷூட் விளம்பரம் என பிஸியாக இருந்து வருகிறார். விவாகரத்துக்கு பின் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டது விவாகரத்திற்கு இன்னும் பிரச்சனையை தூண்டியது.

சமீபத்தில் விவாகரத்தால் சமந்தா சந்தோஷமாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சி தான் என்று நாக சைதன்யா கூறியிருந்தார். விவாகரத்தால் பல வலிகளை சந்தித்திருக்கிறேன் என்று சமந்தாவும் கூறியிருந்தார்.

இப்படி சென்று கொண்டிருக்கும் சமந்தா படங்களில் கவனம் செலுத்தியும் ரசிகர்களுடன் பேசியும் வருகிறார். இந்நிலையில், சமந்தா அறிமுகமாகிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக், 2010 பிப்ரவரி 26ஆம் தேதி வெளியானது. இதன்மூலம் அவரது 12 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். பலர் இதற்கு வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள்.