திருமணமான நடிகருடன் படுக்கையறை காட்சி!! விவாகரத்துக்கு பின் சிக்கப்போகும் நடிகை சமந்தா..
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன்பின் படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். கஷ்டப்பட்டு வந்த சமந்தா வெளிநாட்டு சிகிச்சை என்று தீவிர சிகிச்சை மேற்கொண்டு உடற்பயிற்சி செய்து மீண்டு திரும்ப ஆயத்தமானார். படிப்படியாக அதிலிருந்து மீண்டு வருகிறேன் என்று சமீபத்திய பேட்டிகளில் கூறி வந்தார்.
தற்போது சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் பிரமோஷனுக்காக அங்கும் இங்குமாக சென்றால் உடல்நிலை மோசமானதாக சமந்தா கூறியிருந்தார்.
இந்நிலையில், விவாகரத்து முக்கிய காரணமாக இருந்த படம் தான் தி ஃபேமிலி மேன் 2. அப்படத்தில் சமந்தாவின் அங்கங்களை தொடும் காட்சியும் படுக்கையறை காட்சியும் இடம்பெற்றதால் நாக சைதன்யா குடும்பத்தினரை கோபப்படுத்தி இருக்கிறது. இதனால், கண்டித்ததை தாங்கமுடியாமல் தான் சமந்தா விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறார்.
அந்த சமயத்தில் அந்த காட்சிகள் எல்லாம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வேறொரு பிரச்சனையும் உருவாகியுள்ளது. அதாவது நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படமான சிட்டாடல் தொடரில், சக நடிகருடன் படுக்கையறை காட்சிகளில் நடித்து படுகவர்ச்சியாக நடித்துள்ளார்.
அதேபோல் இந்திய வெர்சனில் தயாராகி வரும் சிட்டாடல் தொடரில் நடிகர் வருண் தவனுடன் சமந்தா நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா எப்படி அந்த காட்சிகளில் நடித்தாரோ அதேபோன்ர காட்சிகளில் சமந்தாவும் நடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சமந்தாவுக்கு எதிராக விமர்சனங்கள் சிட்டாடல் படத்திலும் எழும் என்று கூறப்படுகிறது. இதனை சமந்தா எப்படி சமாளிக்க போகிறார் என்று சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.