விவாகரத்துக்கு பின் இரண்டாம் கல்யாணம்.. பிரபல நடிகருடன் ரகசிய காதலில் நடிகை சமந்தா..
தமிழ் சினிமாவின் பாணா காத்தாடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் இரு மொழிப்படங்களிலும் நடித்து வந்தார்.
காதல் டு விவாகரத்து
கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சில போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து அதில் சில சர்ச்சையில் சிக்கியதால் கணவர் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் 4 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்தியை வெளியிட்டார் சமந்தா. அதன்பின் படங்களில் க்ளாமர் காட்டியும் புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்டு தன் மார்க்கெட்டை உயர்த்தினார்.

5 கோடியில் சம்பளம்
இதனையடுத்து 5 கோடி அளவில் தன் சம்பளத்தை ஏற்றிய சமந்தா தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இனிமேல் நடிகர்களுடன் நெருக்கம், படுமோசமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க போவதில்லை என்றும் சமுக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் முக்கிய முடிவை எடுத்துள்ளாராம்.

இரண்டாம் திருமணம்
இந்நிலையில் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தி பேமிலி மேன் 2 படத்தில் நடித்த பிரபலம் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமண செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் கூட என் மகன் இப்போது சந்தோஷமாக இருக்கிறான் என்று நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகர்ஜுனா கூறியது பரப்பரப்பை ஏற்படுத்தியும் இருக்கிறது.
