பிரபல நடிகருடன் விமானத்தில் பறந்த நடிகை சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து முன்னணி நடிகரளுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா 2017ல் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்துக்கு பின் படங்களில் பிஸியாகவும் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

கடந்த ஆண்டு தனக்கு மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் இருப்பதாகவும் அதனால் படுத்த படுக்கையில் இருந்து நடக்கக்கூட கஷ்டப்பட்டதாகவும் தெரிவித்தார். அதற்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று இடையில் படங்களில் நடித்தும் வந்தார்.
தற்போது மீண்டு வரும் சமந்தா இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். ஷூட்டிங்கில் ஏற்பட்டபோது சமந்தாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமந்தா காயம் ஆறிப்போனது வருண் தவாண் நடிக்கும் வெப் தொடரின் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். மகளிர் தினத்தன்று படக்குழுவினருடன் விமானத்தில் சென்ற புகைப்படத்தை சமந்தா பகிர்ந்திருக்கிறார்.


