பிரமோஷனுக்காக இப்படியொரு போட்டோஷூட்!! மயோசிடிஸ்க்கு பின் ஆளே மாறிய நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி 12 ஆண்டுகளை கடந்துள்ளார். பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய சமந்தா முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகினார்.
ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை 4 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி புதுவிதமான அவதாரத்தை எடுத்து மிரளவைக்கும் ரோல்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் சமந்தா.
பல மாதங்களாக கடினமாக நடித்து முடித்து சாகுந்தலம் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
அப்படத்தின் பிரமோஷனுக்காக சமந்தா கிளாமர் லுக்கில் ஆளே மாறிய போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 8 மணிநேரத்தில் 17 லட்சம் லைக்ஸ்களை அள்ளி அனைவரையும் ஈர்த்துள்ளார் சமந்தா.


