அரியவகை நோய்க்கு மத்தியில் கர்ப்பம்!! உருகவைத்த நடிகை சமந்தாவின் சாகுந்தலம் வீடியோ
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அதுமுதல் சமந்தா பல பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் தன் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி பல படங்களில் நடித்தும் வருகிறார். இதற்கிடையில் அரியவகை நோயான மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு நடக்க கூட முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாக சில மாதங்களுக்கு முன் தெரிவித்தார்.
அதுகுறித்து யசோதா படத்தில் பிரமோஷன் சமயத்தில் கூட உருக்கமாக அழுது கூறியிருந்தார். நோயை கட்டுப்பட்டுத்த வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் என்று ரசிகர்கள் ஆறுதலாக கருத்துக்களை கூறி வந்தனர்.
இந்நிலையில், இப்படியொரு நிலையில் இருந்தும் கூட நடிகை சமந்தா பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட் வெப் தொடருக்காக சமந்தா எடுத்த கிளாமர் லுக் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.
இவங்களால எப்படி இது முடிகிறது என்று ஆச்சரியத்துடன் கருத்துக்களை கூறி வருகிறார்கல் சமந்தாவின் ரசிகர்கள். தற்போது சாகுந்தலம் படத்தில் கர்ப்பமாக இருக்கும் காட்சியில் கூட நடித்துள்ளார். அப்படத்தின் சமந்தாவின் உருக்கமான பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சில புகைப்படங்களை சமந்தா இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்.





