அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் சமந்தா.. தற்போது எப்படி இருக்கிறார்

Samantha
By Kathick 1 வாரம் முன்
Kathick

Kathick

சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் திரைக்கு வந்தது. நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக தன்னுடைய புகைப்படங்கள் எதையுமே இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் சமந்தா.. தற்போது எப்படி இருக்கிறார் | Samantha Again Admitted In Hospital Shocking News

சில வாரங்களுக்கு முன் தான் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமந்தாவை, அவருடைய மாஜி கணவர் நாக சைதன்யா நேரில் சென்று சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நடிகை சமந்தா பூர்ணமாக குணமடைவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

நடிகை சமந்தாவிற்கு திடீரென உடல்நிலை மோசமாகவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம் சமந்தா. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிப்பட்டுள்ள சமந்தாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறாதாம். இந்நிலையில் தற்போது அவர் நன்றாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.