மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் சமந்தா.. திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
சமந்தா
பல்லாவரத்து பெண் என தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா.
மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி தற்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாக பலருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக உயர்ந்துள்ளார் நடிகை சமந்தா.
நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் வந்தவருக்கு பெரிய தடையாக அமைந்தது மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு. நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இப்போது தான் கொஞ்சம் அதில் இருந்து மீண்டுள்ளார்.
இதனால் சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் இவர் நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது.
தமிழில் ரீ என்ட்ரி
இந்நிலையில், தெலுங்கு மற்றும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க முடிவு செய்து அதற்கான ஸ்கிரிப்ட்களை தற்போது கேட்டு வருகிறாராம்.
ஒரு நல்ல லவ் ஸ்டோரி கதைகளை செலக்ட் செய்து வருகிறாராம். இந்த தகவலை அறிந்து திடீரென சமந்தா இந்த முடிவெடுக்க காரணம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.