நாக சைதன்யாவை ஏமாற்றினேனா?.. சமந்தா சொன்ன பதிலை பாருங்கள்
தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இதன்பின் தமிழ், தெலுங்கு மொழிபடங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக கஷ்டப்பட்டு வந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகாபற்றி வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு சமந்தாவின் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர், ஏன் உங்களுடைய அப்பாவி கணவர் நாகசைதன்யாவை ஏமாற்றினீர்கள்? என்று கேள்வி கேள்வி கேட்டார்.
பதில் அளித்த சமந்தா, "மன்னிக்கவும், நான் வீடியோவில் பேசியிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உதவாது என்று நினைக்கிறேன். இதைவிட உங்களுக்கு இன்னும் வலிமையான விஷயம் தேவைப்படும். நல்லா இருங்க என்று பதிலடி கொடுத்துள்ளார். இதோ அந்த பதிவு
You May Like This Video