சமந்தாவை நான் டைவர்ஸ் பண்ணிட்டேன்!! நிகழ்ச்சியில் உளறிய கொட்டிய பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வருபவர் ஏ ஆர் முருகதாஸ். தீனா படத்தின் மூலம் இயக்குனராக இருந்து அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வந்தார்.
இடையில் கதை விசயத்தில் காப்பி அடிக்கும் இயக்குனர் என்ற பெயரை எடுத்த முருகதாஸ் பக்கமே நடிகர் விஜய் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் செல்லாமல் இருந்து வருகிறார்கள்.
அந்தவகையில் 10 எண்றதுக்குள்ள என்ற படத்தினை தயாரித்த ஏ ஆர் முருகதாஸ் அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது தொகுத்து வழங்கிய விஜே பிரியங்கா மற்றும் பிரியா பவானி சங்கர், சமந்தாவிடம் புடிச்ச ஹீரோயின், டார்லிங் சொல்லிட்டு பாலிவுட்டில் சோனாக்ஷி சின்காவை வைத்து படம் எடுக்கிறீங்களே என்று கேட்டுள்ளார்.
அதற்கு சமந்தாவை நான் டைவர்ஸ் செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அதற்கு சமந்தா, நான் அமைதியா உட்கார்ந்திட்டு இருக்க என்ன ஏன் இழுக்கிறீங்க என்று காமெடியாக கலாய்த்துள்ளார் நடிகை சமந்தா.