4 மாத இடைவெளியில் தனுஷ் - சமந்தா விவாகரத்து? இதுக்கெல்லாம் இவர் தான் காரணம்?

samantha divorce dhanush sekarkammula
By Edward Feb 24, 2022 08:25 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம்தேதி காதல் கணவர் நாக சைதன்யாவை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். அதேபோல் நடிகர் தனுஷும் காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

இந்த இரு ஜோடிகளின் விவாகரத்திற்கு என்ன காரணம் என்று பலர் பல விதமாக கூறி வந்த நிலையில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகை சாய்பல்லவி, நாக சைதன்யா இணைந்து நடித்த லவ் ஸ்டோரி படம் வெளியானது.

அப்படத்தின் போது நாக சைதன்யா, சாய் பல்லவி மீது சில கிசுகிசுக்கள் வெளியானது. அப்போது தான் சமந்தாவிற்கு நாக சைதன்யாவிற்கு விவாகரத்தாகியுள்ளது.

அதே சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்ற செய்தி கடந்த ஆண்டு வெளியாகியது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பது தெரியவில்லை.

அப்படி இவ்விரு நட்சத்திரங்களும் ஒரே இயக்குனரை சம்பந்தப்படுத்தி இருந்ததால் தான் விவாகரத்து பெற காரணமாக இருக்கலாம் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறி வருகிறார்கள். இதனால் விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட் சேகர் கம்முலா என்று பலர் கலாய்த்தும் வருகிறார்களாம்.