சமந்தாவின் வலையில் சிக்காத ஏகே நடிகர்! 12 வருடத்திற்கு பிறகும் அது நடக்குமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா இன்றோடு அவரது 12 அண்டுகள் சினிமா வாழ்க்கையை தொடர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த சமந்தா சில நடிகர்களுடன் இன்னும் நடிக்காமல் இருந்து வருகிறார்.
தெலுங்கு, தமிழ் மொழிகளில் டாப் ஆர்டரில் இருக்கும் நடிகர்களுடன் கூட நடிக்கவில்லை. அதில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். இத்தனை ஆண்டுகளாக விஜய்யுடன் தொடர்ந்து 3 படங்களில் நடித்துள்ளார். விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால், ஜீவா, சித்தார்த் போன்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
இன்றும் கூட அஜித்துடன் நடிக்காமல் இருக்க என்ன காரணம் என பலர் கேள்வி கேட்டும் சீக்கிரம் நடியுங்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். நடிகர் சிம்புவுடன் கூட விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜோடியாக நடிக்கவில்லை.
ஆனால் போடாபோடி படத்தில் வரவட்சுமியின் ரோலுக்கு முதலில் பேசப்பட்டவர் நடிகை சமந்தா தானாம். கால்ஷீட் காரணமாக அது நிறைவேறாமல் போயுள்ளது.