மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின்பும் இப்படியொரு பெரிய அடியா!! நம்பி ஏமாந்து போகும் நடிகை சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய சமந்தா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

முன்னணி நடிகையாக திகழ்ந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகர்த்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார் சமந்தா.
அதன்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்த சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். அதற்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருவதாகவும் சமந்தா கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் சாகுந்தலம் படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 3டி வடிவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அப்படத்தினை பார்த்தவர்கள், படம் ஓரளவிற்கு தான் ஓகே என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதனால் இப்படத்தால் நடிகை சமந்தாவுக்கு பெரிய ஏமாற்றம் கொடுக்கவுள்ளதாம். ஏற்கனவே இப்படத்தின் பிரமோஷனுக்காக ஹைதராபாத், மும்பை என்று சென்று வந்த நிலையில் இப்படியொரு விமர்சனம் சமந்தாவுக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது.