இழுக்கும் விவாகரத்து பிரச்சனை! மும்பையில் செட்டிலாக போகும் சமந்தாவை சரிசெய்யும் முயற்சியில் மாமனார்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் சில சர்ச்சையையும் சந்தித்து வருகிறார் சமந்தா.

அந்தவரிசையில் போட்டோஷுட் விளம்பரம் என நடித்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தாவிற்கு விவாகரத்து செய்யபோகிறாரா என்ற கேள்விதான் தற்போதைய தென்னிந்திய சினிமாவில் செய்திகளாக இருந்து வருகிறது. சமந்தாவும் நாகா சைதன்யாவும் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக திருமண ஆலோசகர்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது சினிமா பிரபலங்களின் குடும்ப வாழ்க்கையை பற்றி பேச்சு எழுந்து வரும் வரிசையில் சமந்தா குடும்பம் தான் முதல் இடத்தினை பிடித்துள்ளது. விவாகரத்து பிரச்சனை எழ முழுக்காரணமாக இருந்தது, சமுகவலைத்தளத்தில் அவர் பெயரை எடிட் செய்தது தான்.

மேலும் இம்முறை தன்னுடைய மாமனாரின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொள்ளாமல், சமூக வலைத்தளத்தில் மட்டுமே வாழ்த்து தெரிவித்தது, இந்த விவாகரத்து குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும் சில தெலுங்கு மீடியாக்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் குடும்ப நல நீதி மன்றத்தை நாடியுள்ளதாக கூறுகிறது.

ஆனால் இது குறித்து இரு தரப்பினரிடமும் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர்களுடைய நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த சிலர் பிரச்சனைகள் குறித்து வாய் திறக்கவில்லை என்றாலும், இவர்களுடைய பிரச்னையை தீர்க்க நாகர்ஜுனா முயற்சித்து வருவதாக கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் நடிகை சமந்தா இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசமால் இடத்தினை விட்டு ஓடிவிடுகிறாராம். ஆனால் இந்தகேள்விகளை நாக சைதன்யாவிடன் யாரும் கேட்கவோ பேட்டிகானவோ இதுவரை முன்வரவில்லை என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

பாலிவுட் படங்களில் தற்போது களமிரங்க இருக்கும் சமந்தா, ஹைதராபாத்தில் இருந்து மும்பையில் செட்டிலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்