விவாகரத்துக்கு பின் ரூட்டே வேற? படத்தை காட்டிலும் அதில் கல்லாகட்டும் நடிகை சமந்தா!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் எல்லைமீறியபடியான போட்டோஷூட் நடத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
நாக சைதன்யாவை விவாகரத்து செய்தப்பின் ஆளே மாறிய சமந்தா புஷ்பா படத்தின் ஊ சொல்றியா பாடலுக்கு அப்படியொரு குத்தாட்டம் போட்டிருப்பார். இதன்பின் விளம்பரங்களில் நடித்து க்ளாமர் போட்டோஷூட் நடத்தியும் வருகிறார். படங்களில் மட்டும் 3 கோடி சம்பளமாக பெரும் சமந்தா விளம்பரப்படங்களில் நடித்து அதில் சம்பாதிக்கும் பணத்தொகையே வேறு.
படம் மட்டும் வாழ்க்கையில் பத்தாது விளம்பரம் மூலம் வருமானத்தை ஈட்ட துவங்கி எந்த எல்லைக்கு போகவும் தயாராக இருக்கிறார்.
இதனை பலர் ஆதரவு தெரிவித்து பாராட்டினாலும் சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் மொத்தம் கிட்டத்தட்ட 24 மில்லியன் பாலோவர்ஸை சமந்தா பெற்றுள்ளார்.