2 வருடம் ஆனது.. மேடையில் கண்கலங்கிய நடிகை சமந்தா

Samantha Tamil Cinema Actress
By Bhavya Mar 21, 2025 10:30 AM GMT
Report

சமந்தா 

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி தற்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் வந்தவருக்கு பெரிய தடையாக அமைந்தது மயோசிடிஸ் நோய் பாதிப்பு. தற்போது கொஞ்சம் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

2 வருடம் ஆனது.. மேடையில் கண்கலங்கிய நடிகை சமந்தா | Samantha Emotional Speech On Stage

சமந்தா வருத்தம் 

இந்நிலையில், தற்போது நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " கடந்த 2 ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டும் கொடுக்கவில்லை.

2 வருடம் ஆனது.. மேடையில் கண்கலங்கிய நடிகை சமந்தா | Samantha Emotional Speech On Stage

இருப்பினும் ரசிகர்கள் என்மீது இந்த அளவிற்கு அன்பு வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. இந்த அன்பிற்கு நான் தகுதியானவள் தானா என்று எனக்குத் தெரியவில்லை" என மேடையில் கண்கலங்கி பேசியுள்ளார்.