தமிழ் படமா வேண்டவே வெண்டாம்? கோடிக்காக அக்கடதேசத்தை நம்பும் நடிகை சமந்தா..
தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சிறு கதாபாத்திர நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. அதன்பின் தெலுங்கில் அப்படத்தின் ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஜெஸ்ஸியாக நடித்தார்.
காதல் கிசுகிசு:-
பாணா காத்தாடி படத்தின் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த சமந்தா அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழிகளில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார். தியாக வேலை செய்யனும் குமாரு படத்தின்மூலம் சித்தார்த்துடன் காதலில் இருந்து லிவ்விங் டு கெதரில் இருந்தார்.
பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு விலகிவிட்டார். பின் தனுஷுடன் நடிக்கும் போது கிசுகிசுக்கப்பட்ட நிலையில் நடிகர் நாக சைதன்யா பக்கம் சென்றார் சமந்தா.
திருமணம் டூ விவாகரத்து:-
மெர்சல், ரங்கஷ்தலம், மகாநதி படத்திற்கு முன்பு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார். திருமணமாகி இருவரும் சந்தோஷமாக இருந்த நிலையில் சில போல்ட்டான கதாபாத்திரங்களில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
அதிலும் தி பேமிலி மேன் 2 படத்தில் அப்படியொரு காட்சிதான் இருவருக்கும் மனகசப்பை உருவாக்கியதாம். இதைதொடர்ந்து சமந்தா-நாக சைதன்யா இருவரும் இணைந்து விவாகரத்து செய்ய முடிவெடுத்து அறிக்கை மூலம் அறிவித்தனர்.
4 வருட திருமணம் வாழ்க்கையை முடித்து கொண்ட சமந்தா விவாகரத்துக்கு பிறகு எல்லைமீறிய புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்டது பெரியளவில் பேசப்பட்டது.
சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் எந்த படங்களும் 3 ஆண்டுகளாக வெளியாகவில்லை. தற்போது விக்னேஷ் சிவன் படமான காத்து வாக்குல ரெண்டுகாதல் படத்தில் நயன் தரா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழுக்கு எண்ட்கார்ட்:-
காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்தின் வேலைகள் சென்று கொண்டிருக்கையில் சமந்தா சகுந்தலம், யசோதா போன்ற படங்கள் உட்பட பாலிவுட், டோலிவுட் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட பல அறிவிப்புகளை வெளியிட்டு வரும் சமந்தா இன்று வரை தமிழ் படங்களில் கமிட்டாகவில்லை. விஜய் தேவரகொண்டாவுடன் படம், பாலிவுட்டில் அடுத்தடுத்த படம் என பிஸி ஷெடூலில் இருக்கும் சமந்தா தமிழுக்கு பல ஆண்டுகளாக முடக்கு போடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஏவிஎம் முன் பீடா கடை போட்ட நடிகர் விக்னேஷ்! 500 கோடிக்கு ஆசைப்பட்டு இப்படி ஆகிட்டாரே?