சமந்தாவின் மாஜி கணவரின் காதலித்த திருமணம் முடிந்துவிட்டதா... அவரே வெளியிட்ட புகைப்படம்..

Samantha Naga Chaitanya Gossip Today
By Edward Nov 06, 2022 09:00 AM GMT
Report

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017ல் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.

அதன்பின் 4 வருட திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் பின் நடிகை சமந்தா பல படங்களில் நடித்து அரியவகை நோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

சோபிதா மாடல் நடிகர் ஒருவரை திருமணம் செய்வது போல் ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த விசயம் வைரலானதை தொடர்ந்து அந்த வீடியோ விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது என்று அவரின் தரப்பில் கூறப்படுகிறது.