அந்த நடிகர் மீது காதல் இருக்கு..இரண்டாம் திருமணத்திற்கு அச்சாரம் போடும் சமந்தா..அவரே போட்ட பதிவு இதோ

Samantha Tamil Cinema Vijay Deverakonda Indian Actress Actress
By Dhiviyarajan Aug 17, 2023 12:44 PM GMT
Report

தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சமந்தா.

இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். பிஸி நடிகையாக வலம் வந்த இவர் கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அதில் இருந்து குணமான சமந்தா தான் கமிட்டான திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு , "There is no such thing as too much love, even too much is not enough" என்று பதிவிட்டு உள்ளார்.

இதற்கு ரசிகர்கள்,சமந்தா விஜய் விஜய் தேவரகொண்டாவை இரண்டாம் திருமணம் செய்ய போகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சமீபத்தில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், சமந்தா விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.