ஓய்வு எடுக்கக்கூட நேரமில்லாமல் பிஸியாக இருந்த சமந்தா.. மார்க்கெட் இல்லாமல் அமெரிக்காவில் செட்டில்..

Samantha Indian Actress
By Edward Oct 03, 2022 10:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிஸியானவர் நடிகை சமந்தா. அறிமுகமான 12 ஆண்டுகளில் 5 கோடி அளவு வரை சம்பளம் வாங்கும் நடிகையாக உச்சத்தை தாண்டினார்.

நாக சைதன்யாவை விவாகரத்து செய்தது முதல் பெரியளவில் பேசப்பட்டவர் நடிகை சமந்தா. அதற்கு காரணம் புஷ்பா படத்தில் போட்ட குத்தாட்டம் சர்ச்சை காட்சியில் நடித்த தி பேமிலி மேன் 2 போன்ற படங்கள் தான்.

இப்படி உச்சத்தை தொட்டு சம்பளத்தை கோடிக்கணக்கில் வாங்கி வரும் சமந்தா சமீபகாலமாக சமுகவலைத்தளங்களில் இருந்து விலகி இருந்து வருகிறார். மேலும் சரும பிரச்சனை ஏற்பட்டதால் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் என்ற செய்தியும் வெளியானது.

ஏற்கனவே அஞ்சான் படத்தின் போது அதிக வெளிச்சத்தில் நடித்து முகத்தில் அலர்ஜி பிரச்சனையை சந்தித்தார். பின் கொஞ்சம் கொஞ்சமாக அதை சரி செய்துவிட்ட சமந்தாவிற்கு அந்த பிரச்சனை மீண்டும் வந்திருக்கிறது.

இதனால் தான் பழைய புகைப்படங்களை ரீ போஸ்ட் செய்து வருகிறார் சமந்தா. யசோதா, குஷி, சகுந்தலம் போன்ற படங்களில் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். அவரை தேடி வாய்ப்புகள் குறைந்தும் வருகிறதாம்.