விவாரகத்துக்கு பின் ஆட்டிப்படைத்த மயோசிடிஸ் நோய்!! நடிகை சமந்தா கூறிய உண்மை..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை குறுகிய காலத்தில் பெற்றார்.

முன்னணி தென்னிந்திய நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 வருடங்களுக்கு பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2021ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். எழுந்து கூட நடக்க முடியாமல் தீவிர சிகிச்சையில் இருந்தேன் என்று பேட்டிகளில் வருத்ததுடன் தெரிவித்தார்.

அதிலிருந்து மீண்டு வந்த சமந்தா கிளாமர் போட்டோஷூட்டுக்கு மீண்டும் மாறினார்,. சமீபத்தில் அவர் நடித்த சாகுந்தலம் படத்தின் பிரமோஷனுக்காக பாலிவுட் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார் சமந்தா.
அப்போது, மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு குணமடைந்துவிட்டீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சம்ந்தா, இன்னும் அந்த நோயில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்றும் முன்பை விட எனது உடல் நிலை நல்ல முன்னேற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கூடிய சீக்கிரமே மயோசிடிஸ் நோயின் பிடியில் இருந்து முழுமையாக விடுபடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக சமந்தா கூறியுள்ளார்.