மயோசிடிஸ்-ஆல் அவதிப்பட்ட சமந்தாவுக்கு என்ன சிகிச்சை தெரியுமா!!
சமந்தா
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் 2012ல் இருந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
இதன்பின் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்து வந்த சமந்தா நாக சைதன்யாவை 2017ல் திருமணம் செய்து வாழ்ந்து படங்களால் திருமணத்திற்கு பின் சர்ச்சையில் சிக்கினார். இதன்காரணம் உட்பட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை கடந்த ஆண்டு பிரிந்தார்.
இதன்பின் கிளாமர் ஆட்டம் போட்டோஷூட் என்று படங்களில் நடித்து பிஸியாகினார். இதன்பின் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக கஷ்டப்பட்டு வருவதாக அறிக்கை மூலமும் பேட்டி மூலமும் உருக்கமாக தெரிவித்தார்.

மயோசிடிஸ்
கடந்த வாரம் உடல்நிலை மோசமானதாக சமந்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதெல்லாம் பொய் என்று சமந்தா தரப்பில் கூறியது தற்போது ஹைதராபாத்தில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் சமந்தாவின் உடல்நிலைக்கு தற்போது ஆயுர்வேத மருத்துவர்களால் சிகிச்சை கொடுக்கப்பட்டும் வருகிறதாம். மயோசிடிஸ் நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்காவிட்டாலும் அதிலிருந்து விடுபட பல காலம் எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள். தற்போது ஆயுர்வேத மருத்துவம் பலன் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.