எழுந்து கூட நடக்க முடியாமல் இருந்த சமந்தா.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா

Samantha
By Kathick Nov 28, 2022 07:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் திரைக்கு வந்தது. நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக தன்னுடைய புகைப்படங்கள் எதையுமே இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன் தான் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமந்தாவை, அவருடைய மாஜி கணவர் நாக சைதன்யா நேரில் சென்று சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் நடிகை சமந்தா பூர்ணமாக குணமடைவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாகவும், அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதன்பின், சமந்தா எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது மறுத்தவர்கள் ஆலோசனையின்படி வீட்டிலிருந்தபடியே ஆயர்வேத மருத்துவத்தை மேற்கொண்ட வரும் சமந்தா முன்பை விட தற்போது உடல்நிலை தேறி வருவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் முழுமையாக குணமடைவார் என்று கூறப்படுகிறது.