விவாகரத்துக்கு பின் திருமண கோலத்தில் நடிகை சமந்தா.. ஷாக்கான ரசிகர்கள்

Samantha Naga Chaitanya Marriage
By Kathick Aug 06, 2022 08:00 AM GMT
Report

நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரியப்போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்கள். இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்று எண்ணிய ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதில் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல் வெளிவந்தது.

ஆனால், இதுவரை அவர் தரப்பில் இருந்து எப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நடிகை சமந்தா இஸ்லாமிய முறைப்படி திருமண உடை அணிந்துள்ள புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதை பார்த்த சிலர் சமந்தாவிற்கு திருமணமா என கேட்டு வருகிறார்கள்.

ஆனால், அது உண்மை இல்லை. இந்த உடை காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக அவர் அணிந்துகொண்டது. ஆம், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் இஸ்லாமிய பெண்ணாக நடித்திருந்தார் சமந்தா. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சமந்தா அணிந்திருந்த அந்த உடையின் போட்டோஷூட் தான் இது..


GalleryGallery