மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின்பும் உடலில் ஏற்பட்ட பிரச்சனை!! சமந்தாவுக்கே ஏன் இப்படி..

Samantha Shaakuntalam
By Edward Apr 15, 2023 03:38 AM GMT
Report

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை சமந்தா, தமிழில் பாணா காத்தாடியும் தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ரீமேக்கிலும் நடித்து பிரபலமானார்.

இதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின்பும் உடலில் ஏற்பட்ட பிரச்சனை!! சமந்தாவுக்கே ஏன் இப்படி.. | Samantha Is Down With High Fever And Lost Voice

அதன்பின் படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். கஷ்டப்பட்டு வந்த சமந்தா வெளிநாட்டு சிகிச்சை என்று தீவிர சிகிச்சை மேற்கொண்டு உடற்பயிற்சி செய்து மீண்டு திரும்ப ஆயத்தமானார். படிப்படியாக அதிலிருந்து மீண்டு வருகிறேன் என்று சமீபத்திய பேட்டிகளில் கூறி வந்தார்.

சமீபத்தில் சாகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ள சமந்தா, படம் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறது. இந்நிலையில் சமந்தா, சமீபத்தில் சாகுந்தலம் படத்தின் பிரமோசன் வேலைகளில் அங்கும் இங்குமாக சென்று பிஸியாக இருந்தார்.

மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின்பும் உடலில் ஏற்பட்ட பிரச்சனை!! சமந்தாவுக்கே ஏன் இப்படி.. | Samantha Is Down With High Fever And Lost Voice

அதனால், கடந்த வாரம் முழுவதும் படத்தை விளம்பரம் செய்து உங்களின் அன்பில் நனைந்திருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஓயாமல் விளம்பரம் செய்ததில் தற்போது காய்ச்சல் ஏற்பட்டு என் வாய்ஸ் போய்விட்டது என்று கூறியிருக்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சீக்கிரம் குணமடையும் படி கேட்டு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.