1300 கோடி! சமந்தா எடுத்த முடிவு.. இரண்டு நடிகர்களுடன் சேர்ந்து செய்யப்போவது இதுதான்

Samantha
By Kathick 9 days ago
Report

நடிகை சமந்தா இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் எனும் வெப் சீரிஸ் வெளிவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

1300 கோடி! சமந்தா எடுத்த முடிவு.. இரண்டு நடிகர்களுடன் சேர்ந்து செய்யப்போவது இதுதான் | Samantha Joining Hands With Two Top Heros

இந்நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இரண்டு திரைப்படங்களுடன் மாஸ் கம் பேக் கொடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ராம் சரண் மற்றும் புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ரூ. 700 கோடி பட்ஜெட்டில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதே கூட்டணியில் இதற்கு முன் ரங்கஸ்தலம் படம் வெளிவந்துள்ளது.

1300 கோடி! சமந்தா எடுத்த முடிவு.. இரண்டு நடிகர்களுடன் சேர்ந்து செய்யப்போவது இதுதான் | Samantha Joining Hands With Two Top Heros

மேலும் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்திலும் சமந்தா தான் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார் என கூறுகின்றனர். இந்த இரண்டு திரைப்படங்களின் மூலம் விட்ட இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.