சமந்தா பிரபல நடிகருடன் 'குஷி'! காஷ்மீரில் ஹனிமூன்?

Samantha
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

நடிகை சமந்தா விவாகரத்து செய்த பிறகு பல படங்களில் ஒப்பந்தம் ஆகி தற்போது பிசியாக நடித்து வருகிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்து அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்து சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் சமந்தா தற்போது விஜய் தேவரக்கொண்டா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சமந்தா பிறந்தநாளை அவருடன் கொண்டாடிய வீடியோ வைரல் ஆனது.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. படத்திற்கு குஷி என பெயரிடப்பட்டு இருப்பதாகவும், இந்த வருட இறுதியில் டிசம்பர் 23ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த போஸ்ட்டரை பார்க்கும் போது அது ஹனிமூன் கதையாக தான் இருக்கும் என தெரிகிறது. சமந்தா சேலையையும், விஜய் தேவரகொண்டா உடையையும் சேர்ந்து முடிச்சு போட்டிருக்கிறார்கள்.

போஸ்டர் இதோ

 

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.