சைடிஸ் இருக்கு சரக்கு எங்க! இரவு பார்ட்டியில் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்..

samantha tamilactress
By Edward Apr 21, 2022 01:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பாணா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தார்.

இதையடுத்து தெலுங்கு, தமிழ் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இடையில் நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்து பிறகு அவரைவிட்டு பிரிந்துவிட்டார்.

சில காரணங்களால் அவரை விட்டு பிரிந்த சில காலத்தில் தான் அறிமுகமாகி பல வருடங்களாக நட்பாகி இருந்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் நடிக்க ஆரம்பித்த சமந்தா, சூப்பர் டீலக்ஸ் படத்தில் போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதன்பின் தி பேமிலி மேன் 2 என்ற வெப் படத்தில் படுமோசமான காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார். ரசிகர்களுக்கே ஷாக்கான அந்த காட்சி கணவர் குடும்பத்திற்கு மனக் கசப்பினை உருவாக்கியது.

இதனால் நாக சைதன்யாவும் சமந்தாவும் கருத்து வேறுபாடுகள் ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற முடிவெடுத்தனர். கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்வதாகவும் அறிக்கை மூலம் செய்தியை அளித்தனர்.

தற்போது முழு சுதந்திரத்தோடு இருக்கும் சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் பாடல், க்ளாமர் ஆடையில் நடிப்பு, போட்டோஷூட், விளம்பரம் என சுற்றித்திரிந்து வருகிறார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சமந்தாவின் முகபாவனைகள் ரசிகர்களை பெரியளவில் ஈர்த்து வருகிறது.

தற்போது இரவு பார்ட்டியில் நள்ளிரவில் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் சைடிஸ் இருக்கு, சரக்கு எங்கே மேடம் என்று கலாய்த்து வருகிறார்கள்.

Gallery