உண்மையில் சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு! திடீரென அப்படி செய்ய காரணம்?

samantha tamilactress willsmith
By Edward Feb 25, 2022 07:45 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா தற்போது பல முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின் ஆளே மாறி புதிய சுயரூபத்தை எடுத்து வருகிறார்.

மன அழுத்தத்தில் இருந்த சமந்தா ஆன்மீக பயணம் நண்பர்களுடன் சுற்றுலா என்று விவாகரத்து சம்பவத்தை மறக்க இதையெல்லாம் செய்து வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அவர்கள் கூறிய வசனத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

’கடந்த 30 ஆண்டுகளாக மற்றவர்களை போன்று தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து, மரனம் போன்றவற்றை எதிர்கொண்டிருக்கிறேன். எனது பணம் பறிபோகியுள்ளது. குடும்பம் சிதைந்திருக்கிறது. ஆனால், நான் ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையின் அடுத்த செங்கல்லை உருவாக்கினேன்.

எது நடந்தாலும் சரி உங்கள் முன் மற்றொரு செங்கல் இருக்கிறது. நீங்கள் அதை புதிதாக விட்டுவிட்டு இன்னொன்றை உருவாக்குவீர்களா? என்பதே எனது கேள்வி’ என்ற வசனத்தை பதிவிட்டுள்ளார்.

செங்கல் என்று குறிப்பிட்டது கஷ்டத்தையா? அல்லது திருமணத்தையா? என்று சமந்தா இப்படி குறிப்பிட்டு இருக்கிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.