லண்டனில் சிக்ஸ்பேக் காட்டி மிரட்டும் போஸ்!! பிரபல நடிகருடன் நெருக்கமான நடிகை சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, யசோதா படத்திற்கு பின் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இடையில் மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்தாலும் படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு கடின உழைப்பை போட்டு வந்தார்.
சமீபத்தில் பிரம்மாண்டமாக உருவான சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறார்.
தற்போது பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் நடித்து வெளியாகவுள்ள Citadel படத்தின் பிரிமியர் ஷோ சமீபத்தில் லண்டனில் நடைபெற்றுள்ளது.
அப்படத்தின் இந்தியன் வெர்ஷனில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் ஜோடியாக சமந்தா நடித்து வருவதால் அந்நிகழ்ச்சிக்கு சமந்தாவும் சென்றிருக்கிறார்.
ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கிளாமரில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான ஆடையணிந்து சிக்ஸ்பேக் காட்டி சென்றுள்ளார்.
வருண் தவனுடன் எடுத்த புகைப்படம், கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா. இதனை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பிளந்து சமந்தாவை ரசித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.








