ட்ரான்ஸ்பரண்ட் உடையில் நடிகை சமந்தா.. ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..
தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாகசைதன்யாவை கடந்த மாதம் விவாகரத்து செய்தார். இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் இது தான் இருக்கும் என்று கூறி, பல விதமாக சர்ச்சைகள் இணையத்தில் எழுந்தன. ஆனால் அதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்தார் சமந்தா.
விவாகரத்துக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வரும் வழியாக, படங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவருடைய கைவசம், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சாகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதுமட்மின்றி, கதாநாயகியை முன்னிலை படுத்தி எடுக்கப்படும் இரு படங்களில் கமிட்டாகியுள்ளார். விரைவில் இப்படங்கள் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் முன்னணி கதாநாயகியாக கொண்டாடப்படும் நடிகை சமந்தா, ரசிகர்கள் கவர்வதற்காக அவ்வப்போது தன்னுடையாக லேட்டஸ்ட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது சிகப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..


