தீவிரமடைந்த மயோசிடிஸ் சிகிச்சை!! சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்த நடிகை சமந்தா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது பாலிவுட் படம் வரை சென்று பிஸியாக இருந்து வருகிறார் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் நடிகை சமந்தா.

அதன்பின் படங்களில் கமிட்டாகி நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தார்.
எழுந்து நடக்கமுடியாமல் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டும் இடையில் படங்களில் நடித்து வந்தார். சாகுந்தலம் படத்திற்கு பின் குஷி மற்றும் இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார்.
சாகுந்தலம் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுத்து தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கேரியர் சம்பந்தமான விசயங்களை பகிர்ந்து வருகிறார்.

அதில், மயோசிடிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டும் வர குஷி படத்திற்கு பின் சின்னதாக ஓய்வெடுக்கவும் உடல் நிலை முழுமையாக குணமடைய இந்த பிரேக் எடுக்கவுள்ளதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழில் வாய்ப்புகள் வரவில்லை யாரும் கூப்பிடவில்லை என்று சமந்தா கூறியது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.