அந்த விசயத்தால் 12 கோடிக்கு ஆப்பு வைத்துக்கொண்ட சமந்தா!! எல்லாத்துக்கும் அந்த நோய் தான் காரணம்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது பாலிவுட் நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் தனக்கு பாதிக்கப்பட்டுள்ள மயோசிடிஸ் நோயால் கடும் அவதிப்பட்ட நிலையில் குஷி மற்றும் சிடடெல் படத்தில் நடித்து வந்தார்.
சமீபகாலமாக ஆன்மீகம், உடற்பயிற்சி, யோகா போன்ற செயல்களில் ஈடுப்பட்டும் வருகிறார். ஆனால் நோயின் தீவிர அதிகரித்ததால் இப்படங்களின் ஷூட்டிங் முடிந்த பின் ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டுக்கு சென்று தீவிர சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் என்றும் கூறப்பட்டது.
இந்த சிகிச்சை முடிந்தப்பி சில காலம் பிரேக் எடுத்து ஓய்வில் இருக்க முடிவெடுத்திருப்பதாகவும் சமந்தா தரப்பில் கூறப்பட்டது. தற்போது சமந்தா பிரேக் எடுத்துக்கொண்டதால் தான் கமிட்டாகிய அனைத்து படங்களில் இருந்தும் விலகிவிட்டார்.
அதனால் ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகைகளையும் திருப்பி கொடுத்திருக்கிறார். இதனால் நடிகை சமந்தா சுமார் 12 கோடி அளவில் நஷ்டத்தை சந்தித்திருக்கிறாராம்.
ஒரு படத்தில் 4 கோடி வாங்கி வந்த சமந்தா பாலிவுட் படங்களுக்கு பின் அந்த சம்பளத்தை ஏற்றி அந்த நஷ்டத்தை ஈடுகட்டி மீண்டு வருவார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
