ஒரே தட்டில் பிரபல நடிகருடன் லஞ்ச் சாப்பிட்ட நடிகை சமந்தா.. புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் சித்தார்த்துடன் நெருக்கமாக இருந்து பொது இடங்களுக்கு ஜோடியாக சென்று காதலித்தும் வந்தனர்.
அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாட்டு ஏற்பட்டு, சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
விவாகரத்துக்கு பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் ஏற்பட்ட கஷ்டப்பட்டு வந்தார். அதிலிருந்து விடுபட பல சிகிச்சைகளும் உடற்பயிற்சிகளும் மேற்கொண்டு வந்தார்.
இதற்கிடையில் கடினமாக நடித்தும் வந்த சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் பாலிவுட் நடிகருடன் சிடடெல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் முக்கிய இடங்களில் நடந்து வருகிறது. அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வரும் சமந்தா, நடிகர் வருண் தவானுடன் ஒரே தட்டில் டின்னர் சாப்பிட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேல இருக்குமோ என்று கலாய்த்து வருகிறார்கள்.

